நிக்கோலஸ் பூரன், சுனில் நரைன் ருத்ரதாண்டவம் - ஆனாலும் DLS முறையில் தோல்வி

நிக்கோலஸ் பூரன், சுனில் நரைன் ருத்ரதாண்டவம் - ஆனாலும் DLS முறையில் தோல்வி

30 ஆவணி 2026 ஞாயிறு 16:40 | பார்வைகள் : 177


கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி DLS முறையில், 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.  

குயின்'ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் காலின் மன்ரோ, சுனில் நரைன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. சுனில் நரைன் (Sunil Narine) 24 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) வாணவேடிக்கை காட்ட, காலின் மன்ரோ (Colin Munro) 52 (42) ஓட்டங்கள் குவித்து லாவ்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.  

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பூரன் 37 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 விளாசினார். இதன்மூலம் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.

ஜமைக்கா கிங்ஸ்மென் 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேசி கார்ட்டி 42 (33) ஓட்டங்களும், மெக்கென்சி 30 (25) ஓட்டங்களும் எடுத்தனர். சைம் அயூப் 18 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார்.  

 

தொடர்ந்து படிக்க