ஜிம்பாப்வேவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து! 27 பேர் பலி

ஜிம்பாப்வேவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து! 27 பேர் பலி

30 ஆவணி 2026 ஞாயிறு 15:23 | பார்வைகள் : 174


தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.

அதில் 35 பேர் பயணித்தனர்.

இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் பங்கேற்க மவுமா நகருக்கு சென்றுள்ளனர்.

விபத்து - 27 பேர் பலி இந்நிலையில், ஹராரே - மஸ்விங்கோ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றபோது எதிரே வந்த லாரி பஸ் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொடர்ந்து படிக்க