இலங்கையில் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொலிஸார் புதிய அறிவுறுத்தல்

இலங்கையில் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு பொலிஸார் புதிய அறிவுறுத்தல்

30 ஆவணி 2026 ஞாயிறு 13:41 | பார்வைகள் : 257


இலங்கை பொலிஸார் ஒலிபெருக்கிகள், Amplifier உள்ளிட்ட ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்தை ஏற்படுத்தி, பொலிஸாரின் எச்சரிக்கைக்குப் பின்னரும் அதனைத் தொடர்ந்தால் ஒலி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை. சட்டரீதியான அனுமதி பெறப்பட்ட விசேட நிகழ்வுகளில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பயன்படுத்த முடியும்.

அதிக அல்லது சட்டவிரோதமான ஒலி தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118 / 119 அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்கலாம்.

தொடர்ந்து படிக்க