2026 TNPL - 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ்
29 ஆவணி 2026 சனி 14:45 | பார்வைகள் : 211
TNPL இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(TNPL) தொடர் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடரின் இறுதிப்போட்டி நேற்று கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில், நாணய சுழற்சியில் வென்ற கோவை கிங்ஸ் முதலில் துடுப்பாட்டம் ஆடி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார்.
தொடர்ந்து 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, 14.2 ஓவர்களில் 98 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணி TNPL சாம்பியன் பட்டதை வென்றது.
ஏற்கனவே 2022 மற்றும் 2023 TNPL தொடரில் கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில்,இது அந்த அணியின் 3வது சாம்பியன் பட்டம் ஆகும்.
சாம்பியன் பட்டம் வென்ற கோவை அணிக்கு ரூ.20 லட்சமும், 2வது இடம் பிடித்த மதுரை அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசு வழங்கப்படும்.
கோவை கிங்ஸ் அணியின் சச்சின் தொடர் நாயகன் விருது வென்றார்.



