சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு!

18 கார்த்திகை 2019 திங்கள் 05:57 | பார்வைகள் : 12350
சந்திராயன்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டு நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது.
இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆம் ஆண்டு தனது ஆயுட்காலம் நிறைவடைந்து.
பின்னர் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சந்திராயன்-3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர்.
இதன்போது, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். எனவே இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் செயற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025