Paristamil Navigation Paristamil advert login

மிக நெருக்கமாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

மிக நெருக்கமாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

16 மார்கழி 2018 ஞாயிறு 12:28 | பார்வைகள் : 11973


இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அண்மையாக சூரியனை படம்பிடித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.
 
மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று சூரியனுக்கு மிக அண்மையாக சென்றது இதுவே முதன்முறை ஆகும்.
 
இந்த மாதம் 11 ஆம் திகதி இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சூரியனிலிருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டிருந்தன.
 
ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூர்தினை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது.
 
அத்துடன் இப் பகுதியில் வெப்பநிலையானது 2,500 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
 
மீண்டும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சூரியனுக்கு அண்மையாக சென்று படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்