‘பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகம் தயாராகிறது..!
1 ஆடி 2026 புதன் 12:43 | பார்வைகள் : 172
‘பீட்சா’ திரைப்படத்தின் நான்காவது பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில், ‘பீட்சா 4’ திரைப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
2012-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த ‘பீட்சா’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் மூலமாகவே கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘பீட்சா 2’ மற்றும் ‘பீட்சா 3’ திரைப்படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றன.
‘பீட்சா 4’ திரைப்படத்தை சி.வி. குமார் எழுதி தயாரித்து வருகிறார். தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை அவர் தயாரிக்கிறார். ஸ்ரீஷ் விஜய் இயக்கும் இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் மூலம் பிரபலமான பிரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சமூக வலைதள பிரபலம் ஹுசைன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘பீட்சா 4’ திரைப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தில் நாசரின் மகன் அபி ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன்பு ‘கடாரம் கொண்டான்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், இந்த படத்தின் மூலம் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan