பெண் எம்.பி வீட்டில் தங்கத்தில் உள்ளாடை! பில்லியன் தினார் ரொக்கம்
1 ஆடி 2026 புதன் 14:16 | பார்வைகள் : 134
ஈராக்கில் பெண் எம்பி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பில்லியன் தினார் ரொக்கம், தங்கத்திலான உள்ளாடை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மே 14 ஆம் திகதி ஈரான் பிரதமராக அலி அல்-ஜைதி பதவியேற்றார்.
ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஊழல் செய்து, சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளன குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, பிரதமர் அலி அல்-ஜைதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக, பாக்தாத்தின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் கணக்கில் கட்டப்படாத கிலோ கணக்கான தங்கமும், ரொக்கமாக பல கோடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 7 எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உட்பட 47 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
98 பில்லியனுக்கும் அதிகமான ஈராக் தினார்களையும், 11 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தையும் மீட்டெடுத்துள்ளதாக ஈராக் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானவை வீடுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளில் மிகவும் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்ததால், அவற்றைத் தோண்டி எடுக்க கனரக இயந்திரங்கள் தேவைப்பட்டன.
எண்ணெய் விநியோக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அலி மாரிஜ் அல் பஹத்லியின் இல்லத்திலிருந்து 4 பில்லியன் ஈராக் தினார் மற்றும் 11 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தை கண்டறிந்துள்ளனர்.
அவரது வீட்டின் நீச்சல் குளக் கட்டிடத்தின் சுவரை உடைத்து டொலர் மற்றும் தினார் நோட்டுகள் தங்க ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நசீஃபின் இல்லத்திலிருந்து 20 பில்லியன் ஈராக்கிய தினார்களுக்கும் மேலான பணத்தையும், தங்க உள்ளாடை உள்ளிட்ட கூடுதல் மதிப்புமிக்க சொத்துக்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதில் ஒரு வீட்டில் தலா சுமார் ஒரு பில்லியன் ஈராக்கிய தினார் பணம் நிரப்பப்பட்ட 9 பிளாஸ்டிக் தண்ணீர் கொள்கலன்களையும், தங்கம் நிரப்பப்பட்ட 5 பெரிய பிளாஸ்டிக் கொள்கலன்களையும் கண்டெடுத்தனர்.
இது முதற்கட்ட சோதனை தான் எனவும், இன்னும் 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் சந்தேக பட்டியலில் உள்ளதால் கைது நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை குறித்து தகவலறிந்த சில எம்பிக்கள், அரசு அதிகாரிகள் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளனர். அதேவேளையில், வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan