Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே பணக்கார மக்கள் இந்த நாட்டு மக்கள்

உலகிலேயே பணக்கார மக்கள் இந்த நாட்டு மக்கள்

1 ஆடி 2026 புதன் 10:46 | பார்வைகள் : 176


உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள்தான் அதிக சொத்து வைத்திருப்பவர்கள் என நிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

UBS என்னும் நிதி அமைப்பு 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய செல்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உலகிலேயே அதிக செல்வம் வைத்திருப்பவர்கள் சுவிஸ் மக்கள்தான் என கணக்கிடப்பட்டுள்ளது.

சுவிஸ் மக்கள் சராசரியாக 910,382 டொலர்கள் சொத்து வைத்துள்ளார்களாம்.

உலகிலேயே அதிக செல்வம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள நாடு அமெரிக்கா. அமெரிக்கர்கள் சராசரியாக 696,277 டொலர்கள் சொத்து வைத்துள்ளார்களாம்.

அதிக செல்வம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ள நாடு லக்ஸம்பர்க். அந்நாட்டவர்கள், சராசரியாக 654,732 டொலர்கள் சொத்து வைத்துள்ளார்களாம்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, சுமார் 944,000 பேர் மில்லியனர்களாக உள்ளனர். அதாவது, நாட்டு மக்களில், வயது வந்தவர்களில், 13.1 சதவிகிதத்தினர் மில்லியனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.