Paristamil Navigation Paristamil advert login

செமி கண்டக்டர் 2.0 இயக்கம்: ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்

செமி கண்டக்டர் 2.0 இயக்கம்: ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்

1 ஆடி 2026 புதன் 06:22 | பார்வைகள் : 167


செமி கண்டக்டர் 2.0 இயக்கத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க மத்திய  நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், மத்திய அமைச்சரவை முன்பு வைக்கப்பட உள்ளது.

உள்நாட்டு செமி கண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதையும், செமி கண்டக்டர் விநியோக சங்கிலியில் இந்தியாவின் திறன்களை  அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, செமி கண்டக்டர் இயக்கத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியன் செமி கண்டக்டர் மிஷன் 1 திட்டத்துக்கு மத்திய அரசு 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. இதில்,  இந்தியாவில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.65 ஆயிரம் கோடியும், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அமைந்துள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தை புதுப்பிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயும், சிப் வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் செமிகண்டக்டர் இயக்கம் 2.0வுக்கு ரூ.125 லட்சம் கோடி  ஒதுக்க செலவினங்களுக்கான நிதி குழு ஒப்புதல் அளித்துள்ளது.  கடந்த வாரம் அளிக்கப்பட்ட கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இதன் மூலம் செமி கண்டக்டர் இயக்கம் 2.0 விரைவில் மத்திய அமைச்சரவையின் முன் பரிசீலனை முன்பு வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் சிப் வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய முழு செமி கண்டக்டர் இயக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்தில்  2.0 இயக்கம் துவக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.