போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்தார் அண்ணாமலை
1 ஆடி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 164
போதைப்பொருளுக்கு எதிராக போராட நாளை முதல் தீவிர முன்னெடுப்பை எடுக்க உள்ளதாக அண்ணாமலை வீடியோ வெளியீட்டு வீ தி லீடர்ஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வீடியோவில் அண்ணாமலை கூறியதாவது:
நாளை ஜூலை 1ம் தேதி போதைப்பொருளுக்கு எதிராக போராட ஆரம்பிக்க கூடிய இயக்கத்திற்கு நான் சொல்வது மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும். போதையில்லாத ஒரு தமிழகம் உருவாகட்டும். ஒரு சாமானிய குடிமகனாக எந்த அரசு பவர் நம்மிடம் இல்லாமல் சாதாரனமாக நாம் களத்தில் இறங்கி இதற்கான வேலையை ஆரம்பிக்கிறோம். ஜூலை முதல் வாரம் நாம் இதை நான்காக பிரித்து இருக்கிறோம்.
ஜூலை முதல் வாரத்தை பொறுத்தவரை நானும், எனது குடும்பமும், போதைப்பொருட்களை இன்று முதல் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கிறோம். 4வது வாரம் வீ தி லீடர்ஸ் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எல்லா இடத்துக்கும் எடுத்து கொண்டு போக வேண்டும். அதேநேரத்தில் ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் ஒரு நிகழ்வாக, போதையில்லா பொள்ளாச்சி என்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாவு செய்து இருக்கிறோம்.
அதேபோல் ஜூலை 26ம் தேதி திருச்செந்தூர் பகுதியில் போதையில்லா தமிழகத்திற்காக அங்கேயும் ஒரு மக்கள் சந்திப்பு, போராட்டம் ஏற்பாடு செய்யப்படும். எதுவுமே போராட்டம் என்று சொல்வதை விட, போதைப்பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும். அரசு அவர்களுடைய வேலையை செய்கிறார்கள், நாம் சமுதாய இயக்கமாக நம்முடைய வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நான் திருச்செந்தூர், பொள்ளாச்சி இரண்டு இடத்திலும் பங்கேற்க இருக்கிறேன்.
அதேபோல் வீ தி லீடர்ஸ் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் உங்களுடைய பகுதியில் பங்கேற்க வேண்டும். உங்களுடைய இடத்தில் மக்களை ஒருங்கிணையுங்கள், அனைவரையும் கொண்டு வாருங்கள். பெரிய மாற்றத்தை ஏற்படுத்துங்கள், நம்முடைய அப்பில் இருக்கும் தகவல்களை மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள், ஜூலை மாதத்தில் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கட்டும், மாற்றம் நம்மிடம் இருந்து துவங்கட்டும். மாறுவோம், மாற்றுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan