மட்டன் நெய் வறுவல்
30 ஆனி 2026 செவ்வாய் 17:07 | பார்வைகள் : 163
அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று மட்டன். மட்டனை வைத்து நீங்கள் பல வகைகளில் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் மட்டன் நெய் ரோஸ்ட் செய்து இருக்கிறீர்களா.? இல்லையென்றால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.இந்த சண்டே புதிதாக வறுத்து அரைத்த மசாலாக்களுடன் மட்டனை நெய்யில் வறுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி பாருங்கள், உங்களை பாராட்டி தள்ளுவார்கள். சுவையான மட்டன் நெய் வறுவலை ருசியாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள் :
மட்டன் மரினேட் செய்ய தேவையானவை :
மட்டன் - 1/2 கிலோ
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மசாலா அரைக்க தேவையானவை :
கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ் ஸ்பூன்
பூண்டு பல் - 6
சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கிராம்பு - 2
மற்ற பொருட்கள் :
புளி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
நுணுக்கிய வெல்லம் - 2 டிஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து குறைந்தபட்சம் 2 மணி நேரம் அறை வெப்பநிலையில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
அடுத்து பிரஷர் குக்கரில் 1/4 கப் தண்ணீருடன் மரினேட் செய்த மட்டனைச் சேர்த்து மூடி அடுப்பில் வேக வைத்து குக்கர் 4 விசில் வரும்வரை விட்டு அடுப்பை அணைத்து பிரஷர் தானாக அடங்கும் வரை விடவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், வெந்தயம், மிளகு, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து சுமார் 4 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தற்போது அடுப்பில் கடாய் சூடானதும் மிதமான தீயில் நெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்த்து நெய் மேலே வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
பின்னர் அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி குறைந்த தீயில் சுமார் 8-10 நிமிடங்கள் அவற்றை சமைக்கவும்.
மட்டன் மசாலா வறுவல் பதத்திற்கு வந்தவுடன் உப்பு சரிபார்த்து அடுப்பை அணைத்தால் சுவையான மட்டன் நெய் வறுவல் சாப்பிட ரெடி...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan