வெனிசுவேலா நிலநடுக்கம் - 1,700 கடந்த பலி எண்ணிக்கை
30 ஆனி 2026 செவ்வாய் 05:07 | பார்வைகள் : 193
வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இந்த இயற்கை பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லா குவைரா மாகாணத்தில் உள்ள காராபல்லேடா நகரில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே ஆரோன் லெவி கான்டிலோ வார்காஸ் என்ற வாலிபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan