பிரதமர் மோடிக்கு செஷல்ஸ் நாட்டின் உயரிய விருதுக்கான காரணம்
30 ஆனி 2026 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 160
செஷல்ஸ் நாட்டின் உயரிய விருதான கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான் விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மனி வழங்கினார். இது இந்தியாவின் உயர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும், பருவநிலை மாற்றத்துறையில் செயல்திறன் மிக்க தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சீறிய தீவு நாடுகளின் விருப்பங்களை முன்னெடுத்து செல்லும் காரணத்தினால், இந்த விருது ஆகும். கார்டியன் ஆப் தி புளூ ஹாரிசான் விருதை பெறும் முதல் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செஷல்ஸ் அரசு விருது குறித்து பலசீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி செஷல்ஸ் குடியரசு விருது உள்ளிட்ட நாட்டின் அனைத்து விருதுகளையும் ரத்து செய்ததுடன், கார்டியன் ஆப் தி புளூஹாரிசன் விருதை உருவாக்க முடிவு செய்தது. இந்த விருது உருவான சில நாட்களிலேயே பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
செஷல்ஸ் நாட்டின் விதிமுறைகளின்படி அந்நாட்டுஅதிபர்கள், உயரிய விருதுக்கு தானாகவே தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள். ஆனால், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் வழங்கப்படும் விதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால், அந்த விருதை ரத்து செய்துவிட்டு புதிய விருதை உருவாக்க செஷல்ஸ் அரசு முடிவு செய்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan