தொடரை விட்டு வெளியேறிய இந்திய மகளிர் அணி - சாதனை படைத்த தீப்தி சர்மா
29 ஆனி 2026 திங்கள் 13:11 | பார்வைகள் : 167
அவுஸ்திரேலிய மகளிர் அணியிடம தோற்றதன் மூலம், இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து T20 மகளிர் உலக கிண்ண தொடரிலிருந்து வெளியேறுகிறது.
2026 T20 மகளிர் உலக கிண்ணத்தின் லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணி, முதலில் துடுப்பாட்டம் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் 57 ஓட்டங்கள் எடுத்தார். 27 பந்துகளில் அரைசதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுர், T20 உலக கிணத்தில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா தரப்பில் சோபி மோலினக்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து, 141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எல்லிஸ் பெர்ரி 56 ஓட்டங்களும், ஆஷ்லே கார்ட்னர் 53 ஓட்டங்களும் எடுத்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த தோல்வியின் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறுகிறது.
இந்த போட்டியில், 1 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி, 284 சர்வதேச போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது தீப்தி சர்மா தனது 278வது சர்வதேச போட்டியில் 356 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan