திறமையற்றவர்கள்... ஜனாதிபதியின் கோபத்தால் பதவி விலகிய தென் கொரிய பயிற்சியாளர்
29 ஆனி 2026 திங்கள் 13:07 | பார்வைகள் : 182
உலகக் கிண்ணம் பிரிவுச் சுற்றிலிருந்து தென் கொரிய அணி வெளியேறிய நிலையில், ஜனாதிபதியின் விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென் கொரியாவின் கால்பந்து அணி முன்னாள் அணித்தலைவரும், இரண்டாவது முறையாக அணியின் பயிற்சியாளராக செய்ல்பட்டு வந்தவருமான ஹாங் மியுங்-போ என்பவரே ஞாயிற்றுக்கிழமையன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகக் கிண்ணம் போட்டிகளை இணைந்து நடத்தும் மெக்ஸிகோவுடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் செக்கியா அணிகளும் இடம்பெற்றிருந்த 'குரூப் ஏ' பிரிவிலிருந்து தென் கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்ஸிகோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து மூன்று புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தனர். செக்கியாவுக்கு எதிரான 2-1 என்ற வெற்றி மட்டுமே அவர்களின் ஒரே வெற்றியாக அமைந்தது.
இந்த நிலையில், தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், அணியின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடி, திறமையற்றவர்களைக் குற்றம் சாட்டி, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஹாங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், தாம் எடுத்த ஒவ்வொரு முடிவும் சரியானதே என்று என்னால் கூற முடியாது, ஆனால் தாம் எடுத்த ஒவ்வொரு முடிவும் கொரிய கால்பந்தை மனதில் கொண்டே எடுக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என ஹாங் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி லீ, திறமையை விட விசுவாசத்திற்கும் கோஷ்டி மனப்பான்மைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, திறமையற்றவர்கள் தலைமைப் பொறுப்புகளில் அமர்த்தப்படும்போது, அதன் விளைவு ஏறக்குறைய தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றார்.
அத்துடன், ஏற்றுக்கொள்ள முடியாத இந்த முடிவால் ஏற்பட்ட ஆழ்ந்த ஏமாற்றத்திற்காக, பொதுமக்களிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பைக் கோருகிறேன் எனவும் ஜனாதிபதி லீ குறிப்பிட்டுள்ளார்.
பெரும் விமர்சனங்களுக்கு ஆளான ஹாங், உலகக் கிண்ணம் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே ரசிகர்கள் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கற்றவராக இருந்தார்.
அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு 'டிரா' (சமநிலை) மட்டுமே தேவைப்பட்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், அனுபவம் வாய்ந்த கேப்டன் சன் ஹியுங்-மினை அவர் அணியிலிருந்து நீக்கினார்; ஆனால் அந்தத் துணிச்சலான முடிவு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan