Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் இலங்கையரின் வீட்டில் ஏற்பட்ட அனர்த்தம்

இத்தாலியில் இலங்கையரின் வீட்டில் ஏற்பட்ட அனர்த்தம்

29 ஆனி 2026 திங்கள் 08:27 | பார்வைகள் : 212


இத்தாலியின் போர்கோ ரோமா பகுதியில்  இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு அடுக்குமாடி வீடு தீப்பற்றியதை அடுத்து, தனது அறையிலிருக்கும் நண்பருடன் வசித்து வந்த இலங்கையர் தீ விபத்தில் சிக்கியுள்ளார்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாண்டி அதிகாலை 4 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட 40 வயதுடைய இலங்கையர்  உடலில் 30 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தீயணைப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் தரைத்தளத்திலேயே தீ பரவியுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினர் Cadidavid பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.