Paristamil Navigation Paristamil advert login

பொதுக்குழுவை துரை வைகோ புறக்கணித்தது ஏன்?

பொதுக்குழுவை துரை வைகோ புறக்கணித்தது ஏன்?

29 ஆனி 2026 திங்கள் 11:34 | பார்வைகள் : 133


நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்கவில்லை.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திக்க, துரை வைகோ வெளியூர் சென்றதால், பங்கேற்கவில்லை' என, வைகோ தெரிவித்தார். ஆனால், தந்தை, மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான், துரை வைகோ வரவில்லை என்று கூறப்படுகிறது.

ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதால், அவர்களை ராஜினாமா செய்யும்படி வைகோ வலியுறுத்தி உள்ளார்.

அவர்கள், 'நாங்கள் பதவி விலக வேண்டும் என்றால், தி.மு.க., கூட்டணியில் வென்ற துரை வைகோவும், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர். மேலும், பொதுக்குழுவுக்கு வராமல், தி.மு.க., ஆதரவு நிலை எடுத்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், வைகோவுக்கும், துரை வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால்,  கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.