வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன் - MI நியூயார்க் அதிரடி வெற்றி
28 ஆனி 2026 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 132
மேஜர் லீக் போட்டியில் பூரனின் MI நியூயார்க் அணி, 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் MI நியூயார்க் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி ஆக்லாந்தில் நடந்தது.
முதலில் ஆடிய MI நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் (Quinton de Kock) 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன், ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் MI நியூயார்க் அணி 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆந்த்ரே ரஸல் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் நரைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 17.5 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆந்த்ரே ஃப்ளெட்சர் 44 ஓட்டங்களும், காலின் மன்ரோ 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய கென்ஜிகே, போஷ் தலா 3 விக்கெட்டுகளும், போல்ட், ருஷில் மற்றும் ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan