Paristamil Navigation Paristamil advert login

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

28 ஆனி 2026 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 179


2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.22 ரூபாயாகவும், விற்பனை விலை 341.87 ரூபாயாகவும் காணப்பட்டது.

இலங்கை ரூபாயின் தற்போதைய பெறுமதி வீழ்ச்சியானது, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

ஏனெனில், இம்முறை வீழ்ச்சியானது உள்நாட்டு தவறான நிர்வாகத்தினால் அல்லாமல், உலகளாவிய சூழ்நிலைகளால் உந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2022 மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில், ஏனைய பிராந்திய நாணயங்கள் ஸ்திரமாக இருந்தபோது, உள்நாட்டு காரணிகளினால் மட்டுமே ரூபாயின் மதிப்பு 370 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், தற்போதைய நிலையில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவதால், பிராந்திய நாடுகளிலும் நாணய பெறுமதி வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.