Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீன சிறுவர்களை இலக்குவைக்கும் இஸ்ரேல் - ஐ.நா. ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

பாலஸ்தீன சிறுவர்களை இலக்குவைக்கும் இஸ்ரேல் - ஐ.நா. ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

28 ஆனி 2026 ஞாயிறு 12:22 | பார்வைகள் : 184


காசா முனையில் பாலஸ்தீன சிறுவர்களைத் திட்டமிட்ட முறையில் இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து இன அழிப்புச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணைக்குழு தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 23.06.2026 வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், பாலஸ்தீன சிறுவர்களுக்கு "முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான மரணங்கள், காயங்கள் மற்றும் பெரும் அதிர்ச்சிகளை" இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீன மக்களை முழுமையாக அழிப்பதற்கான இஸ்ரேலின் இன அழிப்பு நோக்கத்திற்கு, அங்குள்ள சிறுவர்கள் இலக்கு வைக்கப்படுவதே முக்கிய சான்றாகும் என இந்த அறிக்கை விவரிக்கிறது.

இது குறித்து இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிடுகையில், "இது கடந்த காலங்களைப் போன்ற ஒரு கொடூரமான போலிப் பிரசார அறிக்கை" எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐ.நாவுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் "இது ஐ.நா ஆவணத்தின் போர்வையில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் சதி" என இந்த அறிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.Politics