Paristamil Navigation Paristamil advert login

ஈரான் உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழியும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

 ஈரான் உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழியும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

28 ஆனி 2026 ஞாயிறு 09:04 | பார்வைகள் : 172


ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியசாலைகளை இலக்கு வைத்து அமெரிக்க விமானப்படை தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஈரானின் கடலோர ரேடார் நிலையங்களையும் இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், ஈரான் மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.Executive Branch

"அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இவர்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாது. அவ்வாறு தொடருமானால், நான் ஏற்கனவே மிக வெற்றிகரமாக ஆரம்பித்த இராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர நேரிடும். அவ்வாறு நடந்தால், ஈரான்இந்த உலகத்திலிருந்து அழிந்துபோகும்." என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப தனது பதிவில் எச்சரித்துள்ளார்.