Paristamil Navigation Paristamil advert login

லெபனானுடன் உடன்படிக்கை - இஸ்ரேலிய அமைச்சரவைக்குள் கடும் அதிருப்தி

லெபனானுடன் உடன்படிக்கை - இஸ்ரேலிய அமைச்சரவைக்குள் கடும் அதிருப்தி

28 ஆனி 2026 ஞாயிறு 07:35 | பார்வைகள் : 170


லெபனான் உடனான கட்டமைப்பு உடன்படிக்கை தொடர்பாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ,லெபனானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள கட்டமைப்பு உடன்படிக்கையை "மிகப்பெரிய தவறு" என்று அவர் விமர்சித்துள்ளார்.

லெபனான் அரசாங்கத்திலேயே ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால், அந்த நாடு ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களைந்துவிடும் என்று நம்ப முடியாது என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பெரும்பாலான பகுதிகளில் நிலைத்திருந்தாலும், ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை லெபனான் அரசு அகற்றாது என்பது அவரது கருத்தாக கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹிஸ்புல்லாவை ஒட்டுமொத்தமாக அழிக்க இஸ்ரேலிய இராணுவத்தால் மட்டுமே முடியும் என்றும், இந்த உடன்படிக்கை அதற்குத் தடையாக இருக்கும் என்றும் அவர் வாதிடுகிறார்.

இந்த உடன்படிக்கையை எதிர்த்துப் போராடி வரும் பென்-கிவிர், இது குறித்து அமைச்சரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.