கடைசி போட்டியில் வெற்றி - வெளியேறிய பாகிஸ்தான்
27 ஆனி 2026 சனி 17:53 | பார்வைகள் : 186
மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி பிரிஸ்டோலில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.
குல் பெரோஸா (Gull Feroza) 52 பந்துகளில் 63 ஓட்டங்களும், ஆயிஷா ஸாஃபர் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 18 ஒவர்களில் 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாபேட்டே டி லீடே 30 ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய ஃபாத்திமா சனா (Fatima Sana), ஆயிஷா ஸாஃபர் தலா 3 விக்கெட்டுகளும், டயானா பெய்க் மற்றும் சந்து தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று வெளியேறியது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan