Paristamil Navigation Paristamil advert login

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

28 ஆனி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 167


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு, 5ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையும் தோல்வியை தழுவினார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு டில்லி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், தேர்தல் முடிந்த கையோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அதுமட்டுமில்லாமல், அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. முன்னதாக, தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரு கோஷ்டியாக பிரிந்தது.

காங்கிரஸ் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் தொடர்வதையே விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், டில்லி தலைமையோ, அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமனம் செய்து கட்சியின் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தவெக கூட்டணியில் இணைந்ததால் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்த திமுகவுக்கு  மாணிக்கம் தாகூர் தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.