Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்

27 ஆனி 2026 சனி 11:35 | பார்வைகள் : 187


பாகிஸ்தானில் 24 மணித்தியாலத்தில் நிலநடுக்கங்கள் பதிவாகியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அவை ரிச்டர் அளவுகோலில் 4.5, 4.7 மற்றும் 5.3 என பதிவாகியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. 

இந்த நிலையில், இன்று காலை 6.15 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8.36 மணியளவில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 5 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.