மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் வரும்: முதல்வர் சுவேந்து அதிகாரி
27 ஆனி 2026 சனி 10:08 | பார்வைகள் : 169
குஜராத், உத்தரகாண்ட் மற்றும் அசாம் மாநிலங்களை போல், மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இதற்கான நடைமுறைகள் குறித்து சட்டசபையில் அறிவிப்போம். இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வர குஜராத், அசாம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் பின்பற்றிய வழிமுறைகள் இங்கும் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் மே 25 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், பலதார திருமணம் ரத்து செய்யப்பட்டதுடன், லிவ் இன் முறை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதங்களை தாண்டி திருமணம், விவாகரத்து, லிவ் இன் முறைகள் குறித்து பொதுவான விதிமுறைகள் வரையறை செய்ய இந்த சட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது பாஜ உறுதிமொழி அளித்திருந்தது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan