முதல்வர் விஜய் பட தயாரிப்பாளருக்கு டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி!
27 ஆனி 2026 சனி 09:01 | பார்வைகள் : 151
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, டில்லியில் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. அந்த வகையில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை மாநில அரசு நியமித்துள்ளது.
இவர், முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படி பெற்றுத் தருவது, கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும்.
யார் இந்த வெங்கட் நாராயணா?
* கே.வெங்கட் நாராயணா என்பவர் இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
* இவர் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் . தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.
* முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.
* இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan