உலகக் கிண்ணம்... யாரும் எதிர்பாராத அணி - Time traveller சொன்ன அந்த வெற்றியாளர்
26 ஆனி 2026 வெள்ளி 15:21 | பார்வைகள் : 118
FIFA உலகக்கிண்ணம் தொடர் இரண்டாவது கட்டத்தை நெருங்கும் நிலையில், யார் சேம்பியன் பட்டம் வெல்வார் என்பதை Time traveller ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக ஊடகப் பிரபலமான Tona Multiverso என்பவர் தெரிவிக்கையில், FIFA உலகக்கிண்ணம் தொடரை இணைந்து நடத்தும் நாடானது, 1-1 என்ற சமநிலைக்குப் பிறகு பெனால்டி முறையில் நடப்பு உலக சேம்பியன்களை வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணி இறுதி பெனால்டி வாய்ப்பை தவறவிடும் என்றும், அதன் விளைவாக மெக்சிகோ சேம்பியனாகும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், அவரது கணிப்பில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது என கால்பந்து ரசிகர்கள் கூறுகின்றனர். மெக்சிகோ 'ஏ' பிரிவில் வெற்றி பெற்றுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா 'ஜே' பிரிவில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாலும், இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறினால், சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதனால் Time traveller சொல்வது போன்று அவர்கள் இறுதிப் போட்டியில் சந்திப்பது சாத்தியமற்றதாகிவிடும். அர்ஜென்டினா தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானை எதிர்கொள்கிறது.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகளை வீழ்த்தி மெக்சிகோ தனது குழு ஆட்டங்கள் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan