ஜப்பானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்
26 ஆனி 2026 வெள்ளி 09:45 | பார்வைகள் : 188
ஜப்பானின் டோக்கியோ நகருக்கு அருகில் அமைந்துள்ள சிபா மாகாணத்தில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், டோக்கியோவிற்கு அருகில் அமைந்துள்ள தெற்கு இபராக்கி மாகாணத்தில் 4.1 ரிச்டர் அளவு நிலநடுக்கமொன்று அந்நாட்டு நேரப்படி இன்று காலை 11.49க்கு பதிவாகியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan