அமேஸான் நிறுவன நிறுவனர் விண்வெளிக்கு பயணம்!
9 ஆனி 2021 புதன் 12:27 | பார்வைகள் : 13572
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெஸோசும் அவரது சகோதரரும் விண்வெளியில் பயணிக்க உள்ளனர்.
ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆர்ஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 5ம் தேதி அமேஸான் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ள நிலையில் தானும், தனது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு அடுத்த மாதம் 20ம் தேதி செல்லவிருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இவர்களுடன் பயணிக்க ஒரு இருக்கைக்கான ஏலம் நடந்தது.
இதில் 136 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இறுதியில் அதிகபட்சமாக 2 புள்ளி 8 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan