விடுமுறைக் காலங்களிலும் இரத்தாகும் தொடருந்துகள்!
25 ஆனி 2026 வியாழன் 23:12 | பார்வைகள் : 232
விடுமுறைப் பயணங்களின் பெரும் புறப்பாடுகள் நெருங்கிக் கொண்டிருக்கும்போதும், மேலும் சில தொடருந்துகளை இரத்து செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என SNCF எச்சரித்துள்ளது.
பிரான்சின் தொடருந்து வலையமைப்பில் — TGV, Intercités, பிராந்திய தொடருந்துகள் உள்ளிட்ட — வழக்கமாக தினமும் இயங்கும் சுமார் 15,000 தொடருந்துகளில், தற்போது 14,000 தொடருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்று gare de l'Est ல் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் (செவ்வியில்) SNCF பேச்சாளர் Fanichet தெரிவித்தார்.
அவரது விளக்கத்தின்படி, “தொடருந்து அமைப்பு இன்னும் செயல்படுகிறது”. எனினும், பழைய தொடருந்துகளில் உள்ள போதியற்ற குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக, குறிப்பாக சில Corail தொடருந்துகள், சமீபத்திய நாட்களில் பல ஐரோப்பிய நாடுகளில் போலவே, சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் தொடங்கும் விடுமுறைப் பயணங்களின் பெரும் புறப்பாடுகளை முன்னிட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என அவர் கருதினால், மேலும் தொடருந்துகளை இரத்து செய்யத் தயார் எனவும், அதற்கான “பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan