வெள்ளிக்கிழமை பொது வீதிகளில் மதுபானம் அருந்த மற்றும் விற்க தடை!!
25 ஆனி 2026 வியாழன் 21:07 | பார்வைகள் : 411
பரிஸில் நிலவும் கடும் வெப்ப அலையை முன்னிட்டு, ஜூன் 26 வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் பொது வீதிகளில் மதுபானம் அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பரிஸ் காவல் துறை தலைவர் Patrice Faure அறிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன. வெப்பத்தின் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மதுபான விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan