பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார் வி.கே.பாண்டியன் மனைவி
26 ஆனி 2026 வெள்ளி 13:31 | பார்வைகள் : 268
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்த போது அவரின் தனிச்செயலராக இருந்தவர் வி.கே.பாண்டியன். தேர்தல் பிரசாரத்தின் போது அவரை பாஜ கடுமையாக விமர்சித்தது. தேர்தலில் பிஜூ ஜனதா தளம்தோல்விக்கு பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.2000ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ராவத்தை திருமணம் செய்து கொண்டார். இவரும் கட்டாய விருப்ப ஓய்வில் சென்றார்.
இந்நிலையில் சுஜாதா ராவத் இன்று பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
இதன் பிறகு அவர் கூறியதாவது: நவீன் பட்நாயக் தலைமையில் மீண்டும் ஒடிசா மக்களுக்காக பணியாற்ற மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடவுள் ஜெகன்னாதர், மாநில மக்கள், லட்சக்கணக்கான பிஜூ ஜனதா தள தொண்டர்கள் ஆசியுடன் மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாண்டியனை தம்முடைய அரசியல் வாரிசாக அறிவிக்க நவீன் பட்நாயக் திட்டமிட்டு இருந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு அந்த முடிவை பட்நாயக் கைவிட்டார். இதற்கு பாண்டியன் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற பாஜ பிரசாரமும் முக்கிய காரணமாக இருந்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டதாக பாண்டியன் அறிவித்தாலும் இன்னமும் நவீன் பட்நாயக் உடன் நெருக்கமாகவே இருக்கிறார். இந்நிலையில் அவரது மனைவி சுஜாதா, கட்சியில் இணைந்து இருக்கிறார். இவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து தன் வாரிசாக அறிவிக்க நவீன் பட்நாயக் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan