சட்டசபையில் அரசியல் விமர்சனம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
26 ஆனி 2026 வெள்ளி 12:29 | பார்வைகள் : 167
அரசியல் விமர்சனம் சட்டசபையில் செய்யாமல் எங்கு செய்ய முடியும். எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும். ஆளுங்கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒனறும் இல்லை'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கடன் வாங்குவது என்றால், அதன் மூலம் பொது மக்களுக்கான சொத்து உருவாக்கி, மக்களுக்கு அளிக்க வேண்டும். சொத்து என்றால், பள்ளி, மருத்துவமனை, தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தாலும் அது 50 அல்லது 60 ஆண்டுகள் இருக்கும். இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு, படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் வளரும். சுற்றி இருக்கும் இடங்களில் மருத்துவமனை கட்டுவார்கள். போக்குவரத்து வசதி கிடைக்கும். கடன் வாங்கி சொத்து உருவாக்கினால், அதன் வாயிலாக பலதரபட்ட பொருளாதாரத்தில் நல்ல தாக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் வளரும். இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.எதற்கு கடன் வாங்கினோம் என்பதுதான் முக்கியம்.
தமிழகம், மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்படும் என சொல்வது வரவேற்கத்தக்கது. எந்த மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் குறைவாக செய்ய வேண்டும் என பிரதமர் மோடி எப்போதும் சொன்னதில்லை. முன்பு இருந்த ஆட்சியிலும், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் பெரிய திட்டங்கள் கொண்டு வந்தோம்.தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய திட்டங்களும் உரிமையாக வழங்க வேண்டிய தொகையும் வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் மீதான முதல்வர் விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:
அரசியல் விமர்சனம் சட்டசபையில் செய்யாமல் எங்கு செய்ய முடியும். எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும். ஆளுங்கட்சியும் பேசட்டும். அதில் தவறு ஒனறும் இல்லை.
மத்திய அரசு மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை அமைப்பதற்கு மூன்று பட்ஜெட்டிற்கு முன்பே வாக்குறுதி அளித்துள்ளேன். எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் மருத்துவக் கல்லூரி கட்டலாம். அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan