என்எல்சி நிறுவன பங்குகளை விற்கும் முடிவு: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
26 ஆனி 2026 வெள்ளி 10:19 | பார்வைகள் : 164
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளதாவது:
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை2 சதவீதம் அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீதம் கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உள்ளிட்ட 3 சதவீதம் வரையிலான விற்பனைக்கான சலுகை மூலம் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிக்கிறது.
மேலும், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழக அரசு கொள்கை ரீததியாக ஆட்சேபிக்கிறது. என்எல்சி இந்தியா தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும் தமிழகத்துடன் இரண்டர கலந்திருப்பதால் இவ்விவகாரம் தமிழகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
என்எல்சி நிறுவனத்தின் தலைமைகம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமல்ல, எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு, மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசின் எண்ணங்களையும் கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan