Paristamil Navigation Paristamil advert login

வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறல்

வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறல்

26 ஆனி 2026 வெள்ளி 08:13 | பார்வைகள் : 282


பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க தொடங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் மீதான அடக்குமுறையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

நம் அண்டை பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக பாதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறி இரண்டு வாரங்களுக்கு முன் மக்கள் போராடத் தொடங்கினர்.  ராவலகோட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பாக்., பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில், 58க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி போராடி வரும் கூட்டு அவாமி அதிரடி குழு, கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வீட்டை விட்டு வெளியே வர முயன்ற பெண்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி, முரட்டுத்தனமாக தாக்கியுள்ளனர்.

மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பெண்களை அவமதித்ததுடன், தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை ராணுவத்தினர் கொள்ளையடித்துச் சென்றதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்லவிடாமல் ராணுவம் தடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.