Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுகவில் மீண்டும் பதவி

முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுகவில் மீண்டும் பதவி

26 ஆனி 2026 வெள்ளி 07:10 | பார்வைகள் : 143


அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் பதவி வழங்கி அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி தலைமையில் உருவான அணி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எதிராக குரல் எழுப்பியது. இதனால், கோபம் அடைந்த இபிஎஸ், அந்த அணியில் இருந்த 28 மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார்.  அந்தப் பதவிகளுக்கு புதிய நபர்களை நியமித்தார்.

இதனிடையே வேலுமணி  தரப்பினர் சமாதானமாகி மீண்டும் இபிஎஸிடம் ஐக்கியமாகினர். இருப்பினும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டோருக்கு அதே பதவியை இபிஎஸ் மீண்டும் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பதவிகளை வழங்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
துணை பொதுச்செயலாளர்கள் -முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி தலைமை நிலையச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம்

அமைப்புச் செயலாளர்கள்- முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,  கருப்பணன், எஸ்பி சண்முகநாதன், அன்பழகன், காமராஜ், வீரமணி,  பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் கோ.அரி, கிருஷ்ணமுரளி, மருதராஜா,  சவுந்தர்ராஜன்

கொள்கை பரப்பு இணைச்செயலாளர்கள் - முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர்,  மணிகண்டன், மற்றும் அருண்மொழிதேவன், மகேந்திரன், நடராஜ், ரெத்தினசாமி

கொள்கை பரப்பு இணைச்செயலாளர்கள்-சந்திரகாசி, சுப்பையா  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்கொடி உயர்த்திய எவருக்கும் பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. அமைப்புச் செயலாளர் மற்றும் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.