சமந்தா சொன்ன மகிழ்ச்சி செய்தி!
25 ஆனி 2026 வியாழன் 15:59 | பார்வைகள் : 189
சென்னையைச் சேர்ந்த சமந்தா, அதர்வாவுக்கு ஜோடியாக 'பாணா காத்தாடி' மூலம் அறிமுகமானார். பின்னர், நான் ஈ திரைப்படத்தின் வெற்றி மூலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முக்கிய நடிகை ஆனார். தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்த சமந்தா பாலிவுட்டிலும் கால் பதித்தார்.
இதனிடையே தெலுங்கு திரையுலக ஜாம்பவான் நாகேஸ்வர ராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான நாகர்ஜூனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை மண முடித்தார். ஆனால் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றனர்.
அண்மையில் ராஜ் நிடிமோருவை மணந்த சமந்தா, திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள எங்கள் தங்கம் மற்றும் தெலுங்குப் பதிப்பான "மா இன்ட்டி பங்காரம்" திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதைக் கொண்டாடினார்.
அப்போதே அவர் கர்ப்பமுற்றிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் மகப்பேறு விடுப்பு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், தாய்மை என்பது தன் வாழ்வில் ஒரு சிறப்பான அத்தியாயம் என்றும், மீண்டும் சினிமாவுக்கு திரும்புவதற்கு முன்பு அதை முழுமையாக அனுபவிக்க விரும்புவதாகவும் சமந்தா கூறினார்.
இந்த ஓய்வு தற்காலிகமானது தான் என்றும், விரைவில் புதிய படங்களும் சினிமாவுக்கு திரும்புவேன் என்றும் சமந்தா மகிழ்ச்சிகரமாக தெரிவித்தார். தாய் ஆகப் போவதாக சமந்தா அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, சமந்தா நடிப்பில் வெளியான 'எங்கள் தங்கம்' (மா இன்ட்டி பங்காரம்) படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குநர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த 19ஆம் தேதி 'எங்கள் தங்கம்' படம் ரிலீஸ் ஆனது. படத்தை சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோரு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
முதல் முறையாக ஆக்ஷன் நாயகியாக சமந்தா நடித்ததால் ரசிகர்களிடையே படம் கவனம் ஈர்த்தது. கடந்த 4 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு படத்தின் வசூல் குவிந்தது. இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சமந்தா மேற்கொண்ட மெனக்கெடல்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan