Paristamil Navigation Paristamil advert login

அஜித் தனது முடிவில் உறுதியாக இருப்பாரா?

அஜித் தனது முடிவில் உறுதியாக இருப்பாரா?

25 ஆனி 2026 வியாழன் 15:44 | பார்வைகள் : 181


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த "குட் பேட் அக்லி" வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அடுத்த படத்தை அஜித் தொடங்கவில்லை. அவருக்காக பக்கா கதையுடன், பிளானுடன் ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கிறார். அந்த படத்தை தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ரெடி. ஆனாலும், சம்பளத்தை அதிகமாக கேட்பதால் அந்த படத்தை தொடங்க முடியவில்லை. அஜித் கேட்கும் 180 கோடி பணத்தை கொடுத்தால் பல கோடி இழப்பு ஏற்படும். குட்பேட்அக்லி கூட நஷ்டத்தை கொடுத்தது, ஆகவே, அஜித் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொல்ல, அவர் இறங்கவில்லை.

இந்நிலையில், அஜித்தே சொந்தமாக படம் தயாரிக்கப்போகிறார். இப்போது அவர் கார் ரேஸ் குறித்த டாக்குமென்ட்ரி படத்தை தயாரித்து வருகிறார். அதை ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கிறார். அடுத்தும் சொந்த படம் தயாரிக்கப்போகிறார். விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள். அஜித் சொந்த படம் தயாரிப்பது நல்லது. அப்போதுதான் அவருக்கு தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரியும் என்கிறார்கள் அவரை வைத்து படம் தயாரித்தவர்கள். ஆனாலும், அஜித் தனது முடிவில் உறுதியாக இருப்பாரா? ரிஸ்கான தயாரிப்பாளர் வேலையில் இருந்து பின்வாங்குவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.