இலவச பள்ளிக்கு அனுமதி பெற தி.மு.க., ஆட்சியில் லஞ்சம்; ஸ்ரீதர் வேம்பு
25 ஆனி 2026 வியாழன் 07:05 | பார்வைகள் : 201
கிராப்புற குழந்தைகளுக் கான இலவச பள்ளிக்கு அனுமதி பெற, தி.மு.க., ஆட்சியில் லஞ்சம் கேட்டதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கிராமப்புற குழந்தைகளுக்கு, முற்றிலும் இலவச கல்வியை வழங்கும் எங்கள், 'கலைவாணி கல்வி மையம்' என்ற பள்ளிக்கு, முந்தைய அரசிடம் அனுமதி பெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. அது முற்றிலும் இலவச பள்ளி என்ற போதிலும், அதற்கான அனுமதியை பெற, பெருமளவில் பணம் கேட்டனர். பணம் கொடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும், எங்களிடம் கூறப்பட்டது.
ஆனால், முதல்வர் விஜய் தலைமையில், த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், அனுமதி விரைவாகவும், தடையின்றியும் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான மாற்றம் பாராட்டுக்குரியது; இந்த வரவேற்கத்தக்க மாற்றத்திற்காகத் முதல்வர் விஜய்க்கு நன்றி.
தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் குமட்டல் எடுக்கும் வகையில், அருவருக்கத்தக்க அளவில் ஊழல் நடந்தது. இது உலகறிந்த உண்மை; இதில் எந்த ரகசியமும் இல்லை. ஊழல் இமாலய அளவை எட்டியிருந்தது.
ஊழல்வாதிகள் நிறைந்த அந்தச் சூழலில் சிக்கிக்கொண்ட நேர்மையானவரான தி.மு.க., நிதியமைச்சரே, அதைப் பற்றி புகார் கூறும் நிலை ஏற்பட்டது. இதனால், அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். தி.மு.க.,வினர் தங்களை உண்மையாகவே சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், ஊழல் விவகாரத்திலிருந்தே, அதைத் தொடங்க வேண்டும்.
மாறாக என்னை, 'த.வெ.க., கைக்கூலி என்று, முத்திரை குத்தி தாக்குவதிலேயே தி.மு.க.,வினர் நேரத்தை செலவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan