திரிஷா ஷேர் பண்ணியது AI போட்டோ ?
24 ஆனி 2026 புதன் 17:26 | பார்வைகள் : 247
நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்ராக மாறியிருப்பவர் விஜய். சில மாதங்களுக்கு முன்பு அவரின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தபோது தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதே விவாகரத்துக்கு காரணம் எனக் கூறியிருந்தார்., ஒருபக்கம் விஜயுடன் நடிகர் திரிஷா நெருக்கமாக இருந்ததால் சங்கீதா குறிப்பிட்டது திரிஷாவைத்தான் பலரும் புரிந்து கொண்டனர்
. அதை நிரூபிப்பது போல அந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை கூட்டிக்கொண்டு ஜோடி சகிதமாக ஒரு திருமண விழாவிலும் கலந்து கொண்டார்.
தற்போது விஜய் முதலமைச்சராகிவிட்ட நிலையில் கடந்த 22ம் தேதி விஜய் தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த சில வருடங்களாகவே விஜயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வந்த திரிஷா கடந்த 22ம் தேதி விஜய்க்கு எந்த வாழ்த்து என்று தெரிவிக்காமல் இருந்தார்.
இது விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஏனெனில் திரிஷா ஏதாவது போஸ்ட் போட்டால் அது விஜயின் இமேஜை பாதிக்கும் என அவர்கள் பயந்தார்கள்.
ஆனால் நேற்று மாலை திடீரென விஜய் திரிஷாவின் அருகில் நின்றவாறு பிறந்தநாளை கொண்டாடுவது போல புகைப்படத்தை திரிஷா பகிர்ந்தார். இதை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
மேலும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ‘எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லையா?’ என அவர்கள் சமூக வலைத்தளங்களில் திரிஷாவை திட்ட துவங்கினார்கள். இந்நிலையில், திரிஷா பகிர்ந்தது முழுக்க முழுக்க ஏஐ போட்டோ.. அது நிஜமான போட்டோ அல்ல என பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘அந்த போட்டோவை நன்றாக ஜூம் செய்து பாருங்கள்.. அது முழுக்க முழுக்க ஏஐ மற்றும் 2D-யில் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜயின் சட்டை காலரை பாருங்கள்.. டேபிளுக்கு அருகில் அவர் நிற்பதை பாருங்கள். சட்டையும், டேபிளும் மடங்கியிருக்கிறது. அந்த கேக்கிற்கு முன்னால் மூன்று சிறிய கேக்கு இருக்கின்றன.. AI மட்டுமே இப்படி உருவாக்கி கொடுக்கும். விஜயின் சட்டசபை புகைப்படத்தை பயன்படுத்தி AI மூலம் இதை உருவாக்கி இருக்கிறார்கள்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan