Paristamil Navigation Paristamil advert login

டிமாண்டி காலனி -3 தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்!

டிமாண்டி காலனி -3  தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்!

24 ஆனி 2026 புதன் 17:21 | பார்வைகள் : 239


அஜய் ஞானமுத்து மற்றும் அருள்நிதி கூட்டணியில் வெளியான டிமாண்டி காலனியின் முதல் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றன. தற்போது இந்த திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாக தயாராகி வருகிறது.இந்த திரைப்படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே வெளியீட்டிற்கு தயாராக இருந்த இந்த திரைப்படம், கிராபிக்ஸ் பணிகள் முழுமையான திருப்தியுடன் நிறைவடையாத காரணத்தால் வெளியீட்டில் தாமதமானது. தற்போது இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சிப் பாகமும் வெற்றி பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் ‘டிமாண்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதனை சாத்தியமாக்கினார். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்த திரைப்படத்தில் காத்திருக்கின்றன. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு படக்குழுவும் இந்த திரைப்படத்தை மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீடு தொடர்பான பணிகளை தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.