Paristamil Navigation Paristamil advert login

சூப்பர் ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கும் ‘தர்மன்’…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கும் ‘தர்மன்’…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

24 ஆனி 2026 புதன் 17:17 | பார்வைகள் : 291


நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான ஒரே வாரத்திலேயே அவர் அந்த திரைப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது.

தற்போது ‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநரான அஷ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா இன்று எளிய நிகழ்வாக நடைபெற்றது. மேலும், படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல திரையுலக பிரபலங்களும் இந்த தொடக்க விழாவில் பங்கேற்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.