தலைமை பயிற்சியாளர் Didier Deschampsஇன் தாயாருக்கு பிரான்ஸ் அணி அஞ்சலி!!
24 ஆனி 2026 புதன் 07:33 | பார்வைகள் : 363
கால்பந்து தேசிய அணியின் பயிற்சியாளர் Didier Deschamps, தனது தாயாரின் மறைவால் உலகக்கோப்பை முகாமை தற்காலிகமாக விட்டு வெளியேறியுள்ளார். இந்த துயரச் செய்தி பிரான்ஸ் அணியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே, இன்ஸ்டாகிராமில் டெஷாம்ப்ஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவித்து, “எங்களின் எண்ணங்கள் அனைத்தும் உங்களுடனே உள்ளன. நீங்கள் தனியாக இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
டெஷாம்ப்ஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரான்ஸ் வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் பயிற்சியின் போது ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊடகங்களுக்கான அணுகலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நோர்வேக்கு எதிரான போட்டியில் டெஷாம்ப்ஸின் இடத்தை அவரது நீண்டகால உதவியாளர் Guy Stéphan ஏற்கிறார். இதற்கு முன்பும் 2022-ஆம் ஆண்டு, டெஷாம்ப்ஸ் தனது தந்தையை இழந்தபோது, ஸ்டெஃபான் அவருக்குப் பதிலாக அணியை வழிநடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan