ஆண்டி பர்ன்ஹாம் சவாலின்றி பிரித்தானிய பிரதமராவதைத் தடுக்க இரு சிரேஷ்ட எம்.பி.க்கள்
23 ஆனி 2026 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 148
பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்தியோகபூர்வ போட்டி எதுவும் இன்றி, ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் பிரதமராவதைத் தடுக்கும் நோக்கில், அக்கட்சியின் குறைந்தது இரண்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு போட்டியிட வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அல் கார்ன்ஸ் இப்போட்டியில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மரின் தலைமைச் செயலாளர் டெரன் ஜோன்ஸ் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று திங்கட்கிழமை (22) சேர் கீர் ஸ்டார்மர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் மறுநாளான ஜூலை 17ஆம் திகதியே, பர்ன்ஹாம் பிரதமராக பதவியேற்கக்கூடும் என தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், முறையான தலைமைத்துவப் போட்டி ஒன்றின் மூலம் கொள்கைத் திட்டங்கள் பரீட்சிக்கப்படாத ஒரு தலைவர், நாட்டின் பிரதமராவதை அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பவில்லை எனத் தெரியவருகிறது.
எனவே, ஆண்டி பர்ன்ஹாம் சவாலின்றி பிரதமராவதைத் தடுக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவப் போட்டியில் இறங்கவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan