Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் பலி!

கனடாவில் துப்பாக்கிச்சூடு - பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் பலி!

23 ஆனி 2026 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 170


கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபரும் பொலிஸாரின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.