Paristamil Navigation Paristamil advert login

முதலமைச்சர் விஜய்யையே காக்க வைத்த சிம்பு ..

முதலமைச்சர் விஜய்யையே காக்க வைத்த சிம்பு ..

22 ஆனி 2026 திங்கள் 16:57 | பார்வைகள் : 191


தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்பு, அண்மையில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நிகழ்வின் பின்னணியில் நடந்துள்ள ஒரு சுவாரசியமான சீக்ரெட் கதை தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வரும் வேளையில், சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இந்தச் சந்திப்பு குறித்துப் பேசியுள்ள சித்ரா லட்சுமணன், சிம்பு முதலில் கோட்டையில்தான் முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது,

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குச் சிம்பு அங்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். மதியம் ஒரு மணி வரை காத்திருந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்தவர்களிடம், “சிம்பு வருவதாகச் சொன்னீர்களே.. வருகிறாரா இல்லையா? அவர் வந்தால் சேர்ந்து மதியச் சாப்பாடு சாப்பிடலாமே” என்று ஓப்பனாகவே கேட்டுள்ளார்.

அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மேல்தான் சிம்பு தரப்பில் இருந்து போன் செய்து வரவா என்று கேட்டு, அதன் பிறகு விஜய்யின் வீட்டிற்குச் சென்று சந்திப்பு நடந்துள்ளது.

சினிமா ஷூட்டிங்கிற்குத்தான் சிம்பு லேட்டாக வருவார் என்று பேசப்பட்ட நிலையில், நாட்டின் முதலமைச்சரையே எஸ்டிஆர் காக்க வைத்துள்ளார் என்ற இந்தத் தகவல் தற்போது இணையத்தில் நெட்டிசன்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.