Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் விண்கல்லை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள்

செவ்வாய் விண்கல்லை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள்

22 ஆனி 2026 திங்கள் 13:57 | பார்வைகள் : 166


செவ்வாய் விண்கல்லை பகுப்பாய்வு செய்து சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

கனடாவின் ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில்  NWA 8171 என்ற செவ்வாய் விண்கல்லின் சிறிய பகுதி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய துண்டை ஆராய்ச்சி செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று, அதில் வரலாற்றிலேயே முதல் முறையாக புதிய பாறை வடிவத்தையும், கார்னெட் கனிமத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

வேதியல் ஆராய்ச்சி முறைகள் கடினமானதாக கருதப்பட்டதால் லேசர் கருவிகள் மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்தனர்.

ஆராய்ச்சியில் அடர் சிவப்பு நிற இரத்தின கல்லான கார்னெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கார்னெட் ரத்தின கல் பண்டைய எகிப்தியர்கள், ரோமானியர்கள் காலத்தில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகம் குறித்த புதிய கண்ணோட்டத்தை வழங்கி இருப்பதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் டார்லிங் தெரிவித்துள்ளார்.