உண்மையான காதல் வசதிக்காக வராது - சத்குரு சொல்ல வருவது என்ன? தம்பதிகளுக்கான டிப்ஸ்
22 ஆனி 2026 திங்கள் 14:09 | பார்வைகள் : 202
இன்றைய 'டேட்டிங்' உலகிற்கு சத்குருவின் காதல் தத்துவம் ஏன் முக்கியமானது? குடும்ப வாழ்க்கையில் ஈகோவை தவிர்ப்பது நீடித்த வாழ்விற்கு எவ்வாறு உதவுகிறது என அறிவியல் ஆய்வுடன் பார்க்கலாம்.
"Love is self-annihilation. It happens when you fall, not in calculation or convenience" என்ற சத்குருவின் வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, உண்மையான காதல் என்பது நம்முடைய 'நான்' என்ற அகந்தையை முற்றிலுமாக விட்டுக்கொடுப்பதாகும். கணக்குப்போட்டுப் பார்ப்பதிலோ அல்லது நம்முடைய சுய வசதிக்காகவோ காதல் ஏற்படுவதில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல் நம்மை நாமே அடுத்தவருக்காக அர்ப்பணிக்கும் போதுதான் காதல் நிகழ்கிறது என்பதுதான் சத்குருவின் இந்த ஆழமான வரிகளின் எளிய அர்த்தமாகும்.
இன்றைய அவசர உலகத்தில், கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கு இடையே இருக்கும் உறவை மேம்படுத்த இந்த தத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குடும்ப உறவுகளில் இதன் முக்கியத்துவம் என்ன?
இன்றைய நவீன உலகில் பலர் 'கணக்கு பார்த்து' உறவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். உதாரணமாக, அவர்களால் நமக்கு என்ன லாபம்? நம்முடைய வசதிக்கு அவர்கள் செட் ஆவார்களா?" என்று யோசிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், சத்குரு கூறுவது போல, உண்மையான காதல் என்பது வசதிக்காக பயன்படுத்தும் பொருளல்ல.
உறவில் ஈகோ அல்லது சுயநலம் இருக்கும் வரை அங்கு நிம்மதி இருக்காது. "நான், எனது" என்ற எண்ணத்தை ஓரங்கட்டிவிட்டு, அடுத்தவரின் மகிழ்ச்சியையும் நம்முடையதாக பார்க்க ஆரம்பிக்கும்போதே அந்த உறவு பலப்படும்.
சத்குரு கருத்து பற்றி ஓர் அறிவியல் ஆய்வு
சத்குருவின் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல உறவுமுறை நிபுணர் ஜான் காட்மேனின் அறிவியல் ஆய்வு ஒன்று உள்ளது. அதில், துணையின் உணர்வுகளுக்கு அக்கறை காட்டி பதிலளிக்கும் தம்பதியினர் அதிக உறவு திருப்தியை அனுபவிக்கின்றனர். இது "நான்" என்பதை குறைத்து "நாம்" என்ற மனநிலையுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய தலைமுறை கற்க வேண்டிய என்ன?
இன்றைய 'டேட்டிங் கலாச்சாரம்' மற்றும் தற்காலிக ஆசைகளுக்காக இணையும் உறவுகள் பெருகிவிட்ட சூழலில், இந்த பொன்மொழி மிக முக்கியமானது. உறவுகளில் லாப நஷ்ட கணக்குப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நம்முடைய அகந்தையை விட்டுக்கொடுக்கும் போதுதான் உண்மையான மகிழ்ச்சியும், பிரிக்க முடியாத பாசமும் உண்டாகும்.
தம்பதிகளுக்கான எளிய டிப்ஸ்
'நான்' என்பதை தவிருங்கள்: எந்தவொரு சூழலிலும் "நான் சொல்வதுதான் சரி" என்ற ஈகோவை விட்டுவிட்டு, "நம் குடும்பத்திற்கு எது நல்லது" என்று யோசியுங்கள்.
கணக்கு பார்க்காதீர்கள்: "நான் இதை செய்தேன், நீ எனக்கு என்ன செய்தாய்?" என்ற லாப நஷ்ட கணக்கு குடும்ப வாழ்க்கைக்கு உதவாது.
துணையின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்: உங்கள் வசதியை மட்டும் பார்க்காமல், துணையின் சின்னச் சின்ன தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு முன்னுரிமை கொடுங்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan